அறுபடை வீடுகளுக்கும் இலவச ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமா? இதோ விபரங்கள்
Tamiltemples November 27, 2024 No Comments
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஸ்தலங்களுக்கு கட்டணம் இல்லாமல், இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
மூத்த குடிமக்களில் (அதாவது 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்) 200 பேர் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்ய வைக்க உள்ளனர்.
அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 2024 டிசம்பர் 28-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தினை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் (https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடு பயணத்திற்கு விண்ணப்பிக்க தகுதி
அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர்
- அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
- அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவாராகவும் இருத்தல் வேண்டும்.
- வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
- அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும்.
- அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்கப்படவேண்டும்.
- அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகள் அழைத்து வர அனுமதி இல்லை.
- ஆதார் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பங்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக் கொண்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பங்கள் இத்துறை வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- ஆன்மிக பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான வருமான சான்று வட்டாட் சியரிடம் பெற்று இணைக்க வேண்டும்.
- பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் கலந்து கொள்ள முடியும்.
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked. *