கும்பமேளா பற்றி…
Tamiltemples December 2, 2024 No Comments
கும்பமேளா, இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கலந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகும். இந்த நிகழ்வின்போது குறிப்பாக சில புனித நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவதற்காக கூடுகிறார்கள். புனித நீராடுவதைத் தவிர, இமயமலையிலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் கும்பமேளாவுக்கு வரும் சாதுக்களின் தரிசனத்திற்காகவும் மக்கள் கூடுகிறார்கள். கும்பமேளா நான்கு வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வு சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கிறது. இந்த கும்பமேளாவுக்கான நேரமும் இடமும் சூரியன் மற்றும் புனித கிரகமான குரு (பிரஹஸ்பதி) இரண்டின் நிலையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. கும்பமேளா நடத்துவதற்கான விதிமுறைகள் கீழ்க்கண்ட அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளன: சுருக்கமாக: கும்பமேளா – ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நடத்தப்படுகிறது. அர்த்த கும்பமேளா – ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒருமுறை. பூர்ண கும்பமேளா – ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பிரயாக்ராஜில் மட்டும். மஹா கும்பமேளா – 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் மட்டும். கும்பமேளாவின் புனித நீராடும் நாட்கள் பெரும்பாலும் பௌர்ணமி, அமாவாசை போன்ற சந்திர நாள்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. எனினும், ஹரித்வார் கும்பத்தில் மேஷ சங்கராந்தி மற்றும் வைசாகி போன்ற நாட்கள் சூரிய நாட்காட்டியைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன.
Read Moreஅறுபடை வீடுகளுக்கும் இலவச ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமா? இதோ விபரங்கள்
Tamiltemples November 27, 2024 No Comments
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஸ்தலங்களுக்கு கட்டணம் இல்லாமல், இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களில் (அதாவது 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்) 200 பேர் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்ய வைக்க உள்ளனர். அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 2024 டிசம்பர் 28-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தினை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் (https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடு பயணத்திற்கு விண்ணப்பிக்க தகுதி அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர் அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவாராகவும் இருத்தல் வேண்டும். வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும். அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்கப்படவேண்டும். அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன்
Read Moreகோவில் யானைகளை பராமரிக்க விதிமுறைகள் – அறநிலையத்துறை
Tamiltemples November 27, 2024 No Comments
(* படத்தில் உள்ளது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை) சமீப காலங்களில் தமிழகத்தின் கோவில்களில் நடந்த சோகமான சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோவில்கள், மடங்களில் உள்ள யானைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதை பின்பற்றி தமிழக அறநிலையத்துறை, யானைகளை கவனமுடன் பராமரிக்க, 39 விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது. அவற்றில் சில: யானைகளை உறுதியான மண் அல்லது புல்தரையில் நிறுத்தி வைக்க வேண்டும். இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும். யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும். பாகன்கள் கூடுமானவரை அங்குசத்தை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது, அதை சங்கிலியால் பிணைத்து தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவரை யானையின் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கோவில் திருவிழா, சாமி புறப்பாடு நாட்களில், யானையை கொண்டு செல்லும் போது பொதுமக்களிடம் காசு பெறுவதையோ, ஆசிர்வாதம் செய்வதையோ அனுமதிக்க கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்துபவர்களை, யானையின் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. யானைகள் இல்லாத கோவில்களில், திருவிழாவிற்கு தனியார் யானைகளை பெற்று பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கும் இடங்கள் மற்றும் மின் கருவிகள் உள்ள பகுதிகளில் யானைகளை அழைத்துச் செல்லக்கூடாது. இவ்வாறு அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர்
Read Moreமீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026 ஜனவரியில்
Tamiltemples November 27, 2024 No Comments
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2026 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் திருப்பணிகளை முடிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Read More51 சக்தி பீடங்களின் அமைவிடம்
Tamiltemples November 24, 2024 No Comments
சனாதன தர்மம் என்றழைக்கப்படும் இந்து மதம் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் கலவையாக உள்ளது. இந்து மதத்தில் பல்வேறு வழிபாட்டு முறைகள், மதங்கள், கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் உள்ளன. உலகிலேயே அதிக மதம் உள்ள மக்கள் அடிப்படையில், இந்து மதம் மூன்றாவது பெரிய மதமாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான தீர்த்தயாத்திரை மற்றும் மத இடங்கள் உள்ளன. அதில் 51 சக்தி பீடங்களும் அடங்கும், இவை இந்து மதத்தில் புனிதமாகக் கருதப்பட்டு, இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியுள்ளது. தேவி புராணக்கதைகளின் படி, சக்தி பீடங்கள் 51 உண்டு. இவை சக்தி தேவி (பார்வதி தேவி அல்லது சிவனின் மனைவி)யின் புனித தலங்களாக கருதப்படுகிறது. சிவனுக்கு முன் சக்தியை வணங்குவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சக்தி பீடங்களின் புராணம் கதைப்படி, தாட்சாயிணி (சதி)யானவர் பிரஜாபதி தக்ஷன் எனும் அரசரின் இல்லத்தில் தாட்சாயிணியாகப் பிறந்து, சிவபெருமானை மணந்தார். ஒருமுறை முனிவர்கள் மற்றும் ரிஷிகள் யாகம் செய்தனர். அதில் தக்ஷன் வந்தபோது, அனைவரும் எழுந்து நின்றனர் ஆனால் சிவபெருமான் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் தக்ஷன் மிகவும் கோபமாகி, அவமானத்திற்குப் பழிவாங்க யாகம் ஒன்றை நடத்த முடிவெடுத்தார். அந்த யாகத்திற்கு சிவபெருமானையும் அவரது மகளான தாட்சாயிணியையும் தவிர்த்து, மற்ற அனைவரையும் அழைத்தார். தாட்சாயிணிக்கு யாகம் குறித்து தெரிந்தபோது, அவர் சிவபெருமானிடம் யாகத்தில் பங்கேற்க வலியுறுத்தினார். சிவபெருமான் எதிர்ப்புக் கூறினாலும், தாட்சாயிணி யாகத்திற்கு சென்று விடுவதாகத் தீர்மானித்தார். யாகத்திற்குச் சென்ற தாட்சாயிணி,
Read Moreதேவாரப் பாடல் பெற்ற 274 சிவ திருத்தலங்கள் அமைவிடம்
Tamiltemples November 24, 2024 No Comments
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன. சோழநாடு காவிரி வடகரை ஸ்தலங்கள் (Chozhanaadu – Kaaviri Vadakarai)
Read More